“3 மாதங்களாக தலைவர் இல்லா நகராட்சி! அலட்சிய நிர்வாகத்துக்கு எதிராக திட்டக்குடியில் கவுன்சிலர்கள் அலுவலகம் முற்றுகை”!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நகர்மன்ற தலைவர் பதவி காலியாக உள்ளது. புதிய நகர்மன்ற தலைவரை உடனடியாக நியமிக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக