வேப்பூர் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில் 25ஆம் ஆண்டு ஷடாரான்ய சேஷாத்ரியங்கள் பாதயாத்திரை மிக விமர்சையாக தொடக்கம்!
வேப்பூர் அருள்மிகு பால்குஜாம்பிகை சமேத ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோவிலில், பிரித்தியங்கரா தேவி சகித ஸ்ரீ மஹா சரபேஸ்வரர் சந்நதி வழிபாட்டுடன், ஷடாரான்ய சேஷாத்ரியங்கள் 25ஆம் ஆண்டு பாதயாத்திரை இன்று வெள்ளிக்கிழமை மிக விழிப்புணர்வாக ஆரம்பிக்கப்பட்டது.
பாதயாத்திரையில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிவமாலை அணிந்து, பதினோரு நாள் விரதம் இருந்து பக்தி உணர்வுடன் பயணத்தைத் தொடங்கினர். காலையில் 7.00 மணிக்கு வேப்பூர் சிவன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைக்குப் பின்னர் பாதயாத்திரை புறப்பட்டது.
பின்னர் பாதயாத்திரைக்குழு மேல்விஷாரம், அவரைக்கரை, காரைகிராம், வன்னிவேடு, குடிமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராமங்களின் சிவன் கோவில்களிலும் அபிஷேக ஆராதனை செய்து தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் பாதயாத்திரை குழுவினருடன் சேர்ந்து 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் நிகழ்வை சிறப்பித்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்


கருத்துகள்
கருத்துரையிடுக