சிவகங்கை அறிவுத் திருக்கோவிலில் சர்வதேச தியான தினம்-2025!!
சிவகங்கை மாவட்டம்,கடந்த ஞாயிறன்று சிவகங்கை அறிவுத் திருக்கோவிலில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பாக இரண்டாவது 'சர்வதேச தியான தினம்' சிறப்பாக நடந்தது.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை கடந்த ஆண்டு ஏற்று டிச-21., ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ. நா. பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்ம ஸ்ரீ SKM. மயிலானந்தன் அவர்களின் அறிவுறுத்தலின் படி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து அறிவுத்திருக்கோவில்களிலும் சிறப்பு தியான நிகழ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி சிவகங்கை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பாக T. புதூரில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக சிறப்பு தியானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை இறைவணக்கம் மற்றும் குரு வணக்கம் பாடி பேராசிரியர்.கரு. வெற்றிவேந்தன் தொடங்கிவைக்க சிறப்பு தியானத்தை மனவளக்கலை பேராசிரியர். பாக்யலெட்சுமி அவர்கள் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் சிவகங்கை மலைராம் உயர்தர உணவகம் உரிமையாளர் திரு.பாண்டிவேல் அவர்கள் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார்கள். அன்மையில் உலக சமுதாய சேவா சங்கத்தால் மனவளக்கலை ஞானாசிரியர் விருது பெற்ற பேரா.உதயசங்கர் அவர்களுக்கு அன்பர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
போரில்லா நல்லுலகம் மற்றும் உலக அமைதிக்காக உலக நல வேள்வி நடைபெற்றது. இதில் வாழ்க வையகம்,வாழ்க வளமுடன் என்று உலக நன்மைக்காக வாழ்த்து கூறப்பட்டது. திரளாக பெண் பேராசிரியர்கள், அருள் நிதியர்கள், பிரம்மஞானிகள், அருட் செல்வார்கள், தவச்செல்வர்கள், ஜெயின் யுனிவர்சிட்டி மூலம் நடத்தப்படும் யோகாவுக்கான பட்டயப் படிப்பு பயலும் மாணவ மாணவியர் என 50 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
SKY யோகாவை பயிற்றுவிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கு ஆழியார் அறிவுத்திருக்கோவிலுக்கு சென்று அருள்நிதி பயிற்சி முடித்து வந்த ஆசிரியர் பெருமக்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்விற்கு அறக்கட்டளை தலைவர் A.C.சண்முகநாதன் அவர்கள் தலைமை ஏற்க, செயலாளர். ராமநாதன், துணைத் தலைவர்கள். மகேஸ்வரன், பாண்டி ராணி ,சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள். தினகரன்,ராஜேஸ்வரி வெற்றி வேந்தன், ராஜ்குமார் , கோபால் ,வினோத் ராஜா,கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நல்லாசிரியர். அ/நி. உதயசங்கர் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக