மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மார்கழி தைலக்காப்பு உற்சவம்( 2025) !!

மதுரை மாவட்டம்,மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் மாதங்கள் அனைத்திலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்  மார்கழி விழாவையொட்டி 

கோயிலின் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்படுறது. பின் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி பள்ளியறை பூஜை ஆரம்பமாகும். இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடித்து கோயில் நடை சாத்தப்படுகிறது. மார்கழி விழாவையொட்டி வரும் 25ம் தேதி . முதல் 2ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறுகிறது மேற்கண்ட திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு அன்னை மீனாட்சி சிம்மாசனத்தில் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் அன்னை மீனாட்சி புது மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி சித்திரை வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. ஜனவரி 1ந் தேதி அன்னை மீனாட்சி கோ ரதத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் புறப்பாடாவார். ஜனவரி 02 ஆம் தேதி கனக தண்டியலில் அன்னை மீனாட்சி எழுந்தருள்கிறார். ஜனவரி 3ம் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி சுந்தரேஸ்வரர் ரி‌ஷப வாகனத்திலும், அன்னை மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!