ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 2000 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 2000 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொன்னப்பந்தாங்கலில் நடைபெற்றது. இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர்.வினோத்காந்தி தலைமையிலும், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். BLT சிவா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். பெரியசாமி அவர்கள் வரவேற்பிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான J.L.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள். மு.சிவானந்தம், குமுதா குமார்,துரை மஸ்தான், ஒன்றிய செயலாளர்கள்.டி.கிருஷ்ணமூர்த்தி,பெ.வடிவேலு, ஆ.சவுந்தர், இ.செல்வம், S.N.பூர்ணசந்திரன், M.தெய்வசிகாமணி, ஒச்சேரி பாலாஜி, R.P.ரவீந்திரன், S.மணிவண்ணன், கே.பசுபதி, ஆசிரியர் தமிழ்மணி, T.C.பத்மநாபன், நகர செயலாளர்கள். எம்.கோபி, வி.எல்.ஜோதி, பாஸ் என்கிற நரசிம்மன், N.R.சினிவாசன், G.ஜனார்த்தனன், சி.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர். அ.அசோகன், பொதுக்குழு உறுப்பினர். சி.மாணிக்கம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கே.பி.வெங்கடேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள். ஜென்னிஸ்குமார், எஸ்.அன்பரசு, தொழிலதிபர். பிரின்ஸ் ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, தொகுதி பார்வையாளர்கள்.மருது கணேஷ், பாஸ்கரன், ஆதிசேஷன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இறுதியாக இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.மதிவாணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். யாமீன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்


கருத்துகள்
கருத்துரையிடுக