அகவலம் மோட்டூர் பகுதியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், மேநீர் தேக்கத்தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பெ. வடிவேலு பங்கேற்பு!!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகவலம் மோட்டூர் பகுதியில், மேநீர் தேக்கத்தொட்டி அமைத்த தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து, ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில், மேநீர் தேக்கத்தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஒன்றியக்குழு உறுப்பினர். கிருஷ்ணவேணி வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு, மேநீர் தேக்கத்தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். சுப்பிரமணி, வெங்கடேசன், வாசு, இளங்கோ, சுந்தரம், முகம்மது அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!