மதுரையில் பத்திரிகையாளர்களின் சார்பில் நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா!!
மதுரை மாவட்டம்,பத்திகையாளர்களின் முன்னோடியாக திகழ்ந்த மகாகவி பாரதியாரை போற்றும் விதமாக அவரது 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மகாகவி பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றி பெருமை சேர்த்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு மாவட்டத்தலைவர்.எம்.கணேஷ், பொருளாளர். கவிதா, துணைத்தலைவர்கள். பிரேம்சங்கர், சுரேஷ்பாபு, கௌரவ ஆலோசகர்கள் அருள்ஜோதி, சௌகத்அலி, இணைச்செயலாளர். மணிகண்டராஜா, உறுப்பினர்கள். செந்தில்குமார், செந்தமிழன் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக