100 நாள் தேசிய வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி இத்திட்டத்தினை ஒழிக்கும் நோக்கில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தத்தில் திமுக சார்பில் 3 இடங்களில் 100 நாள் தேசிய வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி இத்திட்டத்தினை ஒழிக்கும் நோக்கில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு உழைப்பை உறுதி செய்யும் வகையில் வேலை வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை நீக்கி இத்திட்டத்தினை ஒழிக்கும் நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய அரசையும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியில் திமுக மத்திய ஒன்றியச் செயலர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுகவைச் சேர்ந்த நகரச் செயலர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, நகர அவைத்தலைவர் சரவணன், நிர்வாகிகள் இஸ்மாயில் சுப்பிரமணியன், கணேசன், ரஜபு, கதிரவன், கார்த்திக், சிவா, முத்துராமலிங்கம், பூசாரி, வி.சி.கவைச் சேர்ந்த தமிழ் முகம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழந்தைவேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முகமது அலி, பழனியப்பன் உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை (100 நாள்) உறுதித்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினர். இதைபோல் நத்தம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செந்துறையில் ஒன்றியச் செயலர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமரன், பொருளாளர் கலிபுல்லா,நிர்வாகிகள் பிச்சைமணி, மதியரசு, பிரபாகர், பாலு, சேகர், துரை, அயூப், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின், காங்கிரஸ் நிர்வாகிகள் அருமைநாதன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உள்பட கிராமத்தைச் பெண்கள், ஆண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதைப் போலவே தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலர் ரத்தினகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக