நத்தத்தில் கோயில் குடமுழுக்கு விழாவில் 10 பவுன் நகையை 2 பேரிடம் திருடிய மர்ம நபர்கள்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் வீரமணி (72). இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் ஞாயிற்றுகிழமை நடந்த குடமுழுக்கு விழாவை பார்ப்பதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்று விட்டனர். இதே போன்று தேனி பங்களாமேட்டைச் சேர்ந்த சோலையம்மாள் (66). இவரும் அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்து அதே கோயிலில் நடந்த குடமுழுக்கை  பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண் நாராயணன், கிருஷ்ணக்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!