நெமிலி அருகே நடைபெற்ற SIR முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த எஸ்.ஜி.சி பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், 


கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி SIR முகாம் நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட, சயனபுரம், புதுகண்டிகை, சித்தூர், பரமேஸ்வரமங்கலம், நாகவேடு, கீழாந்துரை ஆகிய ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.  

இந்த SIR முகாமை நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய கழக அவைத் தலைவர். பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய கழக துணைச் செயலாளர்.  வழக்கறிஞர். தமின் அன்சாரி, மாவட்ட பிரதிநிதி. சுரேஷ், மற்றும் திமுக கழக நிர்வாகிகள், BDA BLA2 ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!