இந்திய வாக்காளர்களை வெளியேற்றும் SIR எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
அவர்களின் வழிகாட்டுதலின்படி,கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் படி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே SIR எதிர்த்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA, BLC மற்றும் மாவட்ட, ஒன்றிய , பேரூர் நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் 300- க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்



கருத்துகள்
கருத்துரையிடுக