நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து BLA-2, BDA மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்!!



இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உட்பட்ட BLA-2,  BDA மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பெ. வடிவேலு அவர்கள் பேசியதாவது, தற்போது தமிழ்நாடு முழுவதும் SIR பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வரும்போது அவர்களுடன் நமது  வாக்குச்சாவடி முகவர்கள் ஒன்றிணைந்து தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான உரிய படிவங்களை முறையாக பூர்த்தி செய்து வருகின்ற BLO விடம் ஒப்படைக்கின்ற பணியை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் படிவங்களை சரியாக பூர்த்தி செய்து அளிக்கின்றனரா என்பதை வாக்குச்சாவடி முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்கு உதவியாக இருந்து, வாக்காளர்களை பட்டியலில் இணைப்பதற்கான முறையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒவ்வொரு BLA-2, BDA தங்களது வாக்குச்சாவடிகளில் தினந்தோறும் எத்தனை படிவங்கள் பூர்த்தி செய்து BLO-க்களிடம் வழங்கப்பட்டன என்ற விவரங்களை தலைமை கழகத்திற்கு தெரியப்படுத்தும் விதமாக, ஒன்றிய கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் தினம்தோறும் பதிவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் எஸ்.ஐ.ஆர் திட்டத்தில் எவ்வாறெல்லாம் பணியாற்ற வேண்டும் என்று, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர். ஸ்ரீதர் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள். யோகாபிராமன், ராமமூர்த்தி, ரமேஷ், ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இதில் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, ஒன்றிய கழக நிர்வாகிகள். முகமது அப்துல் ரகுமான், பாண்டியன், அரிகிருஷ்ணன், பாரதி ஜெயச்சந்திரன், வழக்கறிஞர்கள். கார்த்தி, ஆனந்த் மற்றும் BLA-2, BDA, கிளைக் கழக செயலாளர்கள், மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!