SIR-ஐ கண்டித்து வரும் 26-ம் தேதியன்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் ச.சு.ஜைனுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரத்தில் வரும் 26-ம் தேதியன்று ASG தனியார் திருமண மண்டபத்தில் SIR-ஐ கண்டித்து முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர். ச.சு.ஜைனுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன்னதாக, கடந்த 21.11.2025 நேற்று முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர். ச.சுஜைனுதீன் அவர்கள் திராவிட முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் முனைவர். க. பொன்முடி அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தை தெரிவித்து பூங்கொத்துடன் பழங்கள் மற்றும் சால்வை அணிவித்தார்.
இந்த நிகழ்வின்போது,மாநில இளைஞரணி தலைவர் வி. விக்ரம், விழுப்புரம் மாவட்ட விவசாய அணி செயலாளர். சு.ஏழுமலை, காணை ஒன்றிய இளைஞரணி செயலாளர். ஆ.மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்து சிறப்பித்தனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக