நெமிலி மதிய ஒன்றிய திமுக சார்பில் நெமிலியில் தமிழகத் துணை முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டம்! S.G.C .பெருமாள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு துணை  முதலமைச்சருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளர். வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினரும், இராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் MLA அவர்கள் வருகைத்தந்து நெமிலி மத்திய ஒன்றிய திமுக மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தினார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ்.ஜி.சி பெருமாள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி.எஸ் முரளி, நெமிலி மத்திய ஒன்றிய துணை  செயலாளர். அ. சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள். மணிகண்டன் கருணாநிதி, தனஞ்செழியன், சுவேத், பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள்  இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!