ராணுவ வீரர் குடியிருப்பில் கால்வாய் பணி!தொகுதி நிதியில் சு.ரவி MLA துவக்கி வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரம் அகன் நகர் ராணுவ வீரர் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. அரக்கோணம் சட்டமன்ற தொகுதி ரூபாய் 6.20 லட்சம் மதிப்பீட்டில் 120 மீட்டர் நீளமான கால்வாய் அமைக்கும் பணியினை அரக்கோணம்சட்ட மன்ற உறுப்பினர். சு. ரவி MLA தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் . அப்போது அதிமுக அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர். சாலை பழனி, ஒன்றிய துணைச் செயலாளர். பாபு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர். முரளி கிருஷ்ணன் கிளை செயலாளர். பற்குணம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அரக்கோணம் மேற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நரேஷ் காந்த் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக