கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஜெயக்குமார் IPS !!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் உட்லண்ட்ஸ் அருகில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். பள்ளி மாணவ மாணவிகள் சைபர் கிரைம் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றார்கள். 

சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி உட்லண்ட்ஸ் அருகில் துவங்கி போஸ்ட் ஆபீஸ், டவுன்ஹால், கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவுற்றது. இந்த நிகழ்வில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர். V. ரகுபதி, காவல் ஆய்வாளர்கள். கவிதா,  முத்துக்குமரன் சைபர் கிரைம் போலீசார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!