புதிதாக திறக்கப்பட்டFL2 பார் பள்ளிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிதாக திறக்கப்பட்ட FL2 பார், பள்ளிகளுக்கு அருகிலும் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்முன்னாள் அமைச்சர். தங்கமணி பேட்டி:

பள்ளிபாளையத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மது கடைகளை திறக்கப்பட்டதற்கு அருகில் வங்கிகள் குடியிருப்புகள் சாலைகள் குறுகிய சாலை குடித்துவிட்டு சாலையிலே மது குடிப்பவர்கள் பிரச்சனை செய்கிறார்கள் பின்னால் இருக்கக்கூடிய குடியிருப்போர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

இது மிகவும் மக்களுக்கு பாதிப்பு இருப்பதால் இதனை அகற்றக் கூறி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீண்டும் இதே பகுதியில் எஃப் எல் டு ஓபன் செய்வதாக தகவல் வருகிறது ஆகையால் திமுக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல் புதிதாக கடைகளை திறந்து கொண்டிருக்கிறார்கள்...

தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் சந்து கடைகளில் லாட்டரி விற்பனை, கஞ்சா, ஐந்தாம் வகுப்பு மாணவனின் பாக்கெட்டில் கஞ்சா இருக்கும் அளவிற்கு இந்த நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது இதனால் மக்கள் பாதிப்பு இல்லாத இடத்தில் மதுக்கடைகள் வைக்க வேண்டும்

எஸ் ஐ ஆர்   பணியில்  முழு ஈடுபாட்டை அதிமுகவினர் செய்ய வேண்டும் திமுகவினர் இறந்த வாக்காளர்களையும் வெளியூர் வாக்காளர்களை வைத்து திருட்டு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக எஸ்ஐஆர் யை  எதிர்க்கிறார்கள்.

எஸ்ஐஆர் மூலம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பொறுத்தவரை 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லாமல் இருக்கும்  நிலை உள்ளது ஆகையால் இந்த வாக்குகளை வைத்து திமுக திருட்டு ஓட்டு போட திமுக நினைக்கிறது. 

எஸ்ஐஆர் ஆதரிப்பதால் அதிமுக எதிர்கட்சியாக கூட இருக்காது என குற்றச்சாட்டுக்கு  பதில் கூறியபோது...

எஸ்ஐஆர் மூலம் இறந்த வாக்காளர்கள் நீக்கம் செய்ய வேண்டாமா அதை வைத்து திமுக திருட்டு ஓட்டு போட பார்க்கிறார்கள் அதனால் தான் அதிமுகவை திட்டுகிறார்கள்

உண்மையான வாக்காளர்கள் வாக்கு போட்டால் திமுக ஆட்சி வீட்டுக்கு போகும்....

40பீகார் பொறுத்தவரை வாக்காளர்கள் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் பின்னர் நீதிமன்றம் நாடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது ஆனால் திருத்தம் பின்னர் யாரும் நீதிமன்றம் நாடவில்லை ஆகையால் தோல்வி ஏற்று கொள்ள முடியாமல் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் மீது காங் குறை சொல்கிறார்கள்

பீகார் தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு நல்லாட்சிக்கும் மக்கள் திட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர். தங்கமணி தெறிவித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!