நெமிலியில்அ.தி.மு.க நிர்வாகிகள் பெ. வடிவேலு தலைமையில் தி.மு.கழகத்தில் இணைப்பு !!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கணபதிபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் பயணித்த, மேலவை பிரதிநிதி.எம்.ரங்கநாதன் அவர்களும் ராஜீவ் காந்தி, ரஞ்சித்,மோகன் மற்றும் முருகேசன் ஆகியோர்.
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அ.தி.மு.கவிலிருந்து விலகி, தி.மு.கழகத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவரு மான பெ.வடிவேலு அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, கணபதிபுரம் கிளைக் கழக செயலாளர். பார்த்திபன், கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். ரோஷன், சுஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக