விமானத்தில் பயணிகளை வரவேற்பது போல நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலும் பயணிகளை வரவேற்கும் நடத்துனர்!!

காரைக்குடி சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற நடத்துனர். அவரது பேருந்தில் பயணம் செய்ய வரும் பயணிகளை கைகள் கூப்பி வரவேற்கின்றார். அவர் கூறும்போது பயணிகள் பல சிந்தனையில் வருவார்கள் அவர்களை அதே சிந்தனையில் விடாமல் பயணிகளை இன்முகத்துடன் வரவேற்று வணக்கங்கள் கூறி பேருந்தின் பயண கட்டணம் செலுத்தும் முறையை கூறி எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான எண்ணங்களாக ஏற்படுத்துகிறேன் என்றும் இதனால் சில்லறை பிரச்சனைகள் வராது என்றும் பயணிகளுக்கு நடத்துனரிடம் வாக்குவாதம் ஏற்படாது என்றும் இனிமையாக பயணமாக மாற்றி அனைவரையும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக இரு கைகளையும் கூப்பி வருக! வருக!! என வரவேற்கிறோம் என்று பயணிகளிடம் மிகவும் அன்பாக பேசுகின்றார் பேருந்தில் பணமில்லா பரிவர்த்தனை பற்றிய விளக்கங்கள் கூறி ஏடிஎம், ஜி பே, போன் பே பயன்படுத்தி பயண சீட்டுகளை பெற முடியும் என்பதையும் இனிதாக கூறி நன்றிகளை தெரிவித்து தனது பயணிகளிடம் இனிமையான பயணத்தை தொடங்குகிறார். இதனால் பயணிகளும் இன்முகத்துடன் செல்கின்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!