நத்தத்தில் வருவாய்த்துறை, அலுவலர்கள் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த சிறப்பு முகாமிற்கு கால அவகாசம் வேண்டி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு கிராமநிர்வாக அலுவலர் சங்க தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். கிராம உதவியாளர் சங்க தலைவர். தனபால், நிளஅளவையர் அருண்பாண்டியன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேசிய அனைவரும் இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த முகாம் 2026 ஐ வரும் 5ம் தேதிக்குள் முடிக்க மிக குறுகிய காலத்தை நிர்ணயித்துள்ளது. இதனால் பணிச் சுமை கூடுதலாக உள்ளது. எனவே  இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறையினர் உள்ளிட்ட பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே தேர்தல் ஆணையம் காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். வருவாய் உதவியாளர். டில்லிபாபு நன்றி கூறினார்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!