ராணிப்பேட்டையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின்!!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டக் காலத்தில் கர்மவீரர் காமராஜர் அவர்கள் சுலைமான் என்பவர் வீட்டில் தங்கினார் கர்மவீரர் காமராஜர் அவர்கள் தங்கிய வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அம்மூர் சாலை, சமத்துவபுரம் எதிரில் உள்ள மைதானத்தில் சுமார் 25,000 மேற்பட்டோர் பங்கு பெற்ற பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது இந்த மேடையில் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் இதில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர். காந்தி, அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர். ஜெகத்ரட்சகன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். முனிரத்தினம், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன், மாவட்ட ஆட்சித் தலைவர். முனைவர் சந்திரகலா IAS மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர். தனலிங்கம் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!