அரக்கோணம் நகரத்தில் தமிழக மக்கள் கட்சி உதயம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தலைமை இடமாக கொண்டு தமிழக மக்கள் கட்சி துவக்க விழா மாநில தலைவர் புலியேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் திண்டுகல் காட்டு ராஜா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் திருநெல்வேலி சிவம் மோகன்தாஸ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பாளர். சென்னை தியாகராஜன், மாநில தலைமை நிலைய ஆலோசகர் வேலூர் அருள்பாரி, மாநில மகளிர் அணி தலைவர சேலம் சிவ சசிகலா, மாநில் தொண்டரணி தலைவர்".சென்னை மகாத்மா ஜானகிராமன், மாநில மருத்துவரணி) தலைவர். சென்னை டாக்டர் ராமகிருஷ்ணன், மாநில ஆலோசகர் ராணிப்பேட்டை பால்ராஜ். இராணிப்பேட்டை மாவட்ட தலைவர். இளையபிரபு, மாவட்ட இளைஞரணி தலைவர். நாதமுணி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர். சக்தி வேலு உள்ளிட்ட மகளிரணி, இளைஞர் அணியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிவப்பு மஞ்சள் நீல கலர் வண்ணத்தின் நடுவே தென்னை மரம் சின்னத்துடன் கூடிய புதிய கட்சி கொடி மற்றும் பெயர் பேனர் திறக்கப்பட்டது பின்னர் மாநில தலைவர் புலியேந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது ஏழை மக்கள் முன்னேற்றத்திற்காகவும் அவர்களுக்கு நல்ல சுகாதாரம் கல்வி அனைவருக்கும் கிடைத்திடவும் தமிழக மக்கள் கட்சி பாடுபடும் வருகிற 2026 பொது தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ளவோ அல்லது தனித்து போட்டியிடுவது குறித்தோ மாவட்ட செயலாளருடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கபடும் என்றும் தெரிவித்தார் இறுதியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர். சசிகலா புலியேந்திரன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக