புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை புதுவை சட்டப்பேரவை தலைவர். செல்வம் .ஆர் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்!!

புதுச்சேரி மாநிலம்,மணவெளி சட்டமன்றத் தொகுதி தவளக்குப்பம் கொருக்கமேடு கிராமம் மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம். ஆர் அவர்கள் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் மூலம் ரூபாய். 19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார். 

இதன் தொடர்ச்சியாக இப்பணிகளை தொடங்கும் வகையில்   கொருக்கமேடு பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர். செல்வம். ஆர் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை புது சுகாதாரக் கூட்டம் கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர். பீனாராணி இளநிலை பொறியாளர்கள். நிவேதித்தா மற்றும் சிவானந்தம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பொறுப்பு ஆணையர். நாகராஜ் இளநிலை பொறியாளர். அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள். கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், சிவக்குமார், வாழுமுணி ஆண்டியார் பாளையம். ராஜா, சக்திவேல், கணபதி,  சகாயராஜ் ,செந்தில் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!