செயற்கைக்கோள்கள் உருவாக்கும் இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட முதல் தமிழ் மாணவி !!
ரஷ்யாவில் மாஸ்கோவில் அமைந்திருக்கும் விண்வெளி வீரர்கள் பயிற்சி அளிக்கும் இடம் செயற்கைக்கோள்கள் உருவாக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்ட முதல் தமிழ் மாணவி. தான்வி கார்த்திகேயன். மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு. இவர் ஐந்து நாள் பயணமாக சென்று வந்துள்ளார். இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் கேம்பில் தேர்வாகி மாஸ்கோவிற்கு சென்று வந்துள்ளார். மேலும் ரஷ்யா சாட்டிலைட்ஸ் டிசைனிங் தயாரிக்கும் இடத்திற்கும் சென்று வந்துள்ளார். தான்வி கார்த்திகேயனுக்கு இயற்பியல் பாடம் மிகவும் விருப்பமான பாடமாக இருந்துள்ளது கம்பெனி இவரை அழைத்துச் சென்றுள்ளார்கள். அதில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பெயர்களில் டாப் டாப்பில் நம் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாகும் இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு மாணவி பெருமை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக