பள்ளி விடுமுறை என கால நேரம் கடந்த அறிவிப்பால் மாணவ -மாணவியர்கள் அவதி!!

திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல்லில் கிராமப்புறத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி பள்ளிக்கு வருவது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை 7:00 மணி வரை விடுமுறை அறிவிப்பை நிர்வாகம் அறிவிக்கவில்லை. 8 மணிக்கு பிறகு அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை என அறிவிப்பு செய்தனர்.

இதனால் கிராமத்தில் இருந்து 8 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர்கள் மழையால் நனைந்து கொண்டே திரும்ப வீட்டுக்குச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆகவே பள்ளி மாணவ- மாணவியர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிப்பை காலை 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!