அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,அதிமுக மாவட்ட செயலாளர்கள்ஆலோசனைக்கூட்டம்.பொதுச்செயலாளர். எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த
மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அதில் 85 பேர் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தொகுதியில் நடைபெறும் தேர்தல் பணிகள்,வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில்:
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், பி.கே.வைரமுத்து பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். படவிளக்கம்.அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சியில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புதுகை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர். பி.கே. வைரமுத்து.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக