தேவகோட்டை:போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு!!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர். லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர். செந்தில் குமரன் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.ஆசிரியைகள். முத்துலெட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக