மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!
தேனி மாவட்டம் தேனி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுவிலார்பட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இந்த தனியார்வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி படிப்பை முடித்த பல மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பா. ரஞ்சித் சிங் அவர்கள் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக