கற்சிற்ப கலைக்கு பூம்புகாரில் விருது!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் எஸ். தங்கவேல் பாண்டியன் மணிமேகலை இவர்களின் மகன் ஸ்ரீதர் என்ற மாணவனுக்கு பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதுகள் தேர்வில் கற்ச்சிற்ப கைத்தறி தொழிலில் சிறந்த 'கைவினைஞர்' என பாராட்டி மாவட்ட கைத்திறன் விருது வழங்கப்பட்டது. மேலும் ரொக்க பரிசாக 10,000-மும் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. கலைஞர்களின் திறமைகளை பாராட்டி ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விழா சென்னையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் பூம்புகார் கைத்திறன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்.தா.மோ. அன்பரசன் அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக