ராணிப்பேட்டை அரசமைப்பு சட்ட தின கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் SC/ST நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை பாபே சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி பின்னர் 1949 நவம்பர் 26 அன்று 2வருடம்11 மாதம்17 நாட்கள் பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனிமனிதாக இருந்து தன் கடின உழைப்பால் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை இந்திய பாராளுமன்ற அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நிகழ்ச்சி உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி, கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசு துறையை சார்ந்த SC/ST நல சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் SC/ST கூட்டமைப்பின் காப்பாளர் மோகன்தாஸ் அவர்கள் தலைமை தாங்கினார் அமைப்புச் செயலாளர் நித்தியானந்தம் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் SC/ST கூட்டமைப்பின் பொறுப்பாளர் விமல் குமார், விடுதலை சிறுத்தை கட்சி ரமேஷ் கர்ணா , பகுஜன் சமாஜ் கட்சி யுவராஜ் குரு , சுமன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரப்பாக்கம் ராஜா , சீனிவாசன் பேட்டை செல்வம் , மாந்தங்கள் ராஜா பெல்சேகர், ராஜசேகர், தினகரன் இந்திய குடியரசு கட்சி மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். SC/ST கூட்டமைப்பின் பொருளாளர் மலைய ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் மத்திய மாநில அரசு துறை பொது துறை தனியார் துறையின்SC/ST கூட்டமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக