ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகம்!!

இராணிப்பேட்டை மாவட்டம்,இராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திங்கள் தின மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மேல்விஷாரம்‌ தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் டாக்டர்.J.U.சந்திரகலா, I.A.S., அவர்களிடம் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், மேல்விஷாரத்தில் சுமார் 42,000 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர்  பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உரிய தகவல்களை பூர்த்தி செய்ய மேல்விஷாரத்திற்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு 2002-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால் அதே மேல்விஷாரத்தை சேர்ந்த சௌகார் நகர், மேட்டுத்தெரு, ரஷீத்பேட்டை 4-வது தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 வாக்காளர்களின் பெயர்கள் 2002-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக சௌகார் நகர் வாக்காளர்களின் அனைவரது பெயர்களும் 2002-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் சௌகார் நகர், மேட்டுத்தெரு, ரஷீத்பேட்டை 4-வது தெரு வாக்காளர்களுக்கு 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அப்போது அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!