அரக்கோணம் மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் வேண்டும் என தமிழக மக்கள் கட்சி கோரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மருத்துவமனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நவீன ரக உபகரணங்கள் அளிக்க வேண்டும் என தமிழக மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக மக்கள் கட்சி நிறுவன தலைவர். புலியேந்திரன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டதாவது.
வேலூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்தபடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனை நம்பி சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். அப்படி பயனடையும் நேரத்தில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது மேலும் நவீன சிகிச்சை உபகரணங்களும் குறைவாக உள்ளதால் உயர்மற்ற சிகிச்சை அளிக்க இயலாமல் இருந்து வருகிறது இதனால் அருகில் உள்ள திருவள்ளூர் வாலாஜா வேலூர் ஆகிய மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகிறார்கள் இதனால் நோயாளிகள் கர்ப்பிணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே அரக்கோணம் மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உபகரணங்கள் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என தமிழக மக்கள் கட்சி சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கடிதத்தில் தமிழக மக்கள் கட்சி நிறுவன தலைவர். புலியேந்திரன் குறிப்பிட்டு உள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக