பெரிய குளத்தில் சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் அச்சம்!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் கைலாசபுரம் கோவிலில் பின்புறம் சில தினங்களுக்கு முன் விளை நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது இதனை விவசாயிகள் பக்தர்கள் கண்டுள்ளனர் கடந்த வாரம் 100 கிலோ எடையுள்ள மானை சிறுத்தை வேட்டையாடி சாப்பிட்டு மிச்சத்தை விலை நிலங்களில் விட்டுச் சென்றது. கோயில் காடு விவசாயிகள் தேனி வனத்துறையிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரிவித்து அதனை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர் பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரை கூறுகையில் காலடித்தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் என கண்டுபிடித்துள்ளோம். பெரியகுளம் தேனி வனத்துறை இணைந்து சிறுத்தையை தேடி வருகிறோம். சில தினங்களில் பிடித்து விடுவோம் என்று கூறினர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக