வேலூர் சுரபி ஹோட்டலில், பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்!!
முன்னாள் எம்.பி. மற்றும் மாநில துணைத்தலைவர் பா.ம.க. மு.துரை மற்றும் பாமக மாநில மகளிர் சங்க செயலாளர் சரளாராஜி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை!
வேலூர் மாவட்டம், வேலூர், அண்ணா சாலை, சுரபி ஹோட்டலில், பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனைக்கினங்க, வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர். புல்லட் ஜி.கே. செந்தில்குமார் கவுண்டர் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். வி.எஸ். வெங்கடேசன் முன்னிலையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர். அ.பா. சாரதிவர்மன் வரவேற்புரையில், இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி, பா.ம.க. மாநில துணை தலைவருமான மு.துரை மற்றும் பாமக மாநில மகளிர் சங்க செயலாளர். சரளாராஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி பொறுப்பாளர். வரலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர். சரவணன், மாநகர தலைவர். தாமு, மாவட்ட செயலாளர். சுரேஷ்பாபு, அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர். சதீஷ்குமார், இளவம்பாடி குடிசை நேருவீடு பழனி, சத்துவாச்சாரி சிவலிங்கம் மற்றும் பாமக மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இந்த செயற்குழு கூட்டத்தை சிறப்பித்தனர். பொதுமக்களின் நலன் கருதி 12 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் மாநகர செயலாளர் கார்த்திக் நன்றியுரையாற்றி கூட்டம் நிறைவுபெற்றது.
வேலூர் செய்தியாளர் முபாரக் அலி.

கருத்துகள்
கருத்துரையிடுக