ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் தவறவிட்ட தங்க டாலரை காவல்துறையில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!!


ராணிப்பேட்டை மாவட்டம் (29.11.2025) அன்று சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரியா அவர்கள் குடும்பத்துடன் அரக்கோணம் ரயில்வே நிலையத்திற்கு வருகை தந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் சோளிங்கர் கோயிலுக்கு சென்றனர். பின்னர் அதே ஆட்டோவில் திரும்பி ரயில்வே நிலையம் வந்து, சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

பிரியா அவர்கள் பயணித்த ஆட்டோவில் தவறவிடப்பட்டிருந்த சுமார் ஒரு சவரன் தங்க டாலரை, பழனிபேட்டை பகுதியைச் சேர்ந்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாஷா வ/60 அவர்கள் கண்டுபிடித்து, எந்த தயக்கமும் இன்றி உடனடியாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து பிரியா அவர்களுக்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, இன்று அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களின் தங்க செயினிலிருந்து தவறவிழுந்த தங்க டாலரை  ஒப்படைத்தனர்.

நேர்மையுடன் செயல்பட்டு தங்கத்தை காவல்துறையில் ஒப்படைத்து சமூகத்திற்கு முன்மாதிரியாக விளங்கிய ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாஷா அவர்களுக்கு, அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!