கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்திய விவசாய சங்கத்தினர்!!


தேனி மாவட்டம்,மழை வேண்டியும் பருவ மழை செழிப்பாக பெய்ய வேண்டியும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி கூறியும் விவசாயம் செழிக்கவும் கூடலூர் பகவதி அம்மன் கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட கிடா வெட்டி பொங்கல் வைத்து பொங்கல் வைத்து கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு மரியாதை செலுத்தினர் விவசாய சங்கத்தினர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதியிலே சேர்ந்த விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அசைவ விருந்து சைவ விருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு !

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடைமடை ஆன ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி கூறும் விதமாகவும் பருவ மழை பெய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் விவசாயம் செழிக்க மழை வேண்டி முல்லைப் பெரியாறு பூர்வீக கம்பம் இருபோக, ஒரு போக விவசாயிகள் சார்பாக பொங்கல் வைத்து பத்துக்கும் மேற்பட்ட கிடாவெட்டி விருந்து வைத்த விவசாய சங்கத்தினர் கூடலூரின் நெகிழ்ச்சி சைவ, அசைவ உணவுகளுடன் சந்தோஷம் கலந்து விவசாயிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை தெரிவித்து வரும் காலத்தில் நீரினை சேமிக்க வேண்டும் என்றும் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை போற்றி புகழ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூர் தனியார் மண்டபத்தில் அசைவ, சைவ விருதுகள் கிடாவுடன் விருந்து வைத்து உபசரிப்பு விழா நடைபெற்றது. தள வாழை விருந்து வைத்து வாழை இலையில் கிடா சுக்கா, எறும்பு கறி, குடல் கறி ஈரல் கறி சிக்கன் கறி, ரத்த பொரியல், ஸ்வீட் பீடா ஆட்டுக்கால் சூப்பு, இலை முழுவதும் கிடா விருந்து விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தினர் .

தேனி மாவட்ட செய்தியாளர் ஜீவா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!