நத்தம் அருகே தலைக்கவசம் அணிந்த நிலையில் டூ - வீலருடன் சாலையோர ஓடைக்குள் கிடந்த சடலம்!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராபட்டி மற்றும் ஏரக்காபட்டிக்கும் இடையே எடை மேடை அமைந்த பகுதியின் அருகே சாலையோரமாக முட்புதர்கள் மண்டிய நிலையில் ஓடை உள்ளது. செவ்வாய்கிழமை அந்த ஓடை வழியாக ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள்  தலைக்கவசம் அணிந்த நிலையில் சடலம் ஒன்று புழுக்கள் வைத்து அழுகிய நிலையிலும், அருகில் இருசக்கர வாகனம் ஒருபுறம் விழுந்து  கிடந்த நிலையிலும் புதருக்குள் கிடப்பதை பார்த்துள்ளனர். உடன் இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் உதவி ஆய்வாளர். அருண் நாராயணன் உள்ளிட்ட போலீஸார் அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் அருகில் கிடந்த இருசக்கர வாகன  பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நத்தம் காவல் நிலையத்தில் புன்னப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25) என்பவர் கடந்த 21-ஆம் தேதி மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள பட்டூரில் வசிக்கும் தனது தங்கையை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு செல்வதாக அங்கு கூறிவிட்டு வந்தவர்  வீடு திரும்பவில்லை என்றும், பல்வேறு  உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் காணவில்லை என்று கூறி நேற்று திங்கட்கிழமை நத்தம் காவல் நிலையத்தில் அவரது மனைவி திலகவதி புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில்  திலகவதிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்களை வைத்து இறந்து கிடந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்று அடையாளம் காணப்பட்டு உறுதி செய்தனர். இது குறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியின் பிரேதத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூற் ஆய்விற்காக  அனுப்பி வைத்தனர்.மேலும் ஊரை நோக்கி வந்த கிருஷ்ணமூர்த்தி   கட்டுப்பாட்டை இழந்து ஓடை புதருக்குள் பாய்ந்து விழுந்ததில் இறந்தாரா? அல்லது இருசக்கர வாகனம்  மீது வேறு ஏதாவது வாகனம்  மோதி ஓடை புதருக்குள் தூக்கி வீசப்பட்டு இறந்தாரா? எப்படி? எப்பொழுது இறந்தார்?என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!