தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு!
தேனி மாவட்டம்,தேனி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர். சினேகா பிரியா அவர்களின் தலைமையில் 600 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இந்த தேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை போன்ற காலியாக உள்ள 365 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் எழுத்துத்தேர்வு நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புடனும் இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. முதன்முறையாக தேர்வில் முறைகேடு ஏதும் ஏற்படாமல் இருக்க தேர்வு எழுத வருபவர்களின் இடது கை பெருவிரல் கைரேகையும் பதிவு செய்து வருகின்றனர். மொத்தம் இந்த தேர்வில் 2. 2 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வு எழுதுகின்றனர், காலை 8:30 மணி அளவில் இருந்து ஒன்பது முப்பது மணிக்குள் தேர்வு மையங்களில் வந்திருக்க வேண்டும் என்றும் மூன்று முறை தேர்வு எழுத வருபவர்களை பரிசோதனை செய்து அனுப்புகின்றனர் .தேர்வு அறைக்குள் செல்போன் கால்குலேட்டர் அனுமதி கிடையாது. மேலும் பலத்த பாதுகாப்புடன் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக