கடலூர்: சாலையை சீரமைக்க கோரிக்கை!!
கடலூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பண்ருட்டி, பாண்டிச்சேரி, சென்னை செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக