பீகார் தேர்தல் அதிகாரம் வெற்றி மக்கள் தோற்கடிப்பு! முஸ்லீம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர். ச.சு.ஜைனுதீன் கண்டனம்!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் கழக நிறுவனர் முனைவர் ச.சு.ஜைனுதீன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,

பீகாரில் பாஜக ஒரு மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் கூட்டத்தில்  பேசும் போது பாஜக 162 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார். அவர் சொன்னதுபோல் தற்போது பீகாரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அமித்ஷா கூறியதை சற்று உற்று நோக்கினால் அமித்ஷா என்ன கூறினாலும் அது நடக்கும் என்பதுபோல் தற்போது உள்ளது. இந்த வெற்றி எப்படி சாத்தியப்படும். 

பீகாரில் சீமான்ஷயன் என்ற பகுதியில் சுமார் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் முஸ்லீம் மக்கள் வசிக்கிறார்கள். அதற்கு பிறகு யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாசிக்கிறார்கள்.

யாதவ் மற்றும் முஸ்லீம் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதியில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக எப்படி வெற்றி பெற்றதை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.  சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் அமல்படுத்தியதன் காரணமாகவே பீகாரில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக பாஜகவிற்கு கிடைத்துள்ளது

பீகாரில் வாக்குப்பதிவின் போதும், வாக்கு பதிவிற்கு பிறகும், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட சதவீதத்திற்கும் மேலாக சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளது. மேலும் ஹரியானாவில் செய்த பித்தலாட்டம் போலவே பீகாரிலும் பாஜக செய்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அணைக்கப்பட்டதும் இரவு நேரங்களில் லாரிகளில் நிறைய பெட்டிகள் உள்ளே சென்றதும், அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அது என்ன பெட்டிகள், எதற்காக உள்ளே கொண்டு செல்லப்பட்டன  என்பதற்கான பதில் இதுவரை தெரியவில்லை. சிறப்பு ரயில்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கள்ள ஓட்டு போடுவதற்காகவே பீகாருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு தகவலும் உள்ளது.  அதற்கான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பவர்கள் மோடி ஆட்சிக்கு முன்புவரை மக்களாக இருந்தார்கள். ஆனால், தற்போது மோடியும், அமித்ஷாவும் தேர்தல் ஆணையமாக மாறி உள்ளதாக இந்தியா முழுவதும் மக்கள் பேசி வருகிறார்கள். பாஜக சார்பில்  வாக்கு சேகரிக்க சென்றவர்களை “வெளியே போ” என்று  பீகார் மக்கள் கூறிய வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.

பீகாரில் இரண்டாம்கட்ட  வாக்கு பதிவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போது இந்தியா முழுவதும் ஓரே குரலாக கூறப்படுவது, மீண்டும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவில்லையென்றால் நாட்டில் பாஜக மட்டுமே வெற்றிப் பெறும்.

இதனால், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் தேர்தல் என்பதே இல்லாமல் செய்துவிட்டு ஒற்றை ஆட்சி முறை கொண்டுவரும் திட்டம் பாஜகவிடம் உள்ளது. அதற்காகத்தான் தற்போது எஸ்.ஐ.ஆர் என்று சொல்லக்கூடிய சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியை பாஜக முன்னெடுக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய இந்தியாவின் பூர்வ குடிமக்களை, இந்தியாவின் குடிமகன்கள் இல்லை என்று கூறும் திட்டம் பாஜகவிடம் தற்போது உள்ளது.

இன்று பீகாரில் பாஜக பெற்ற வெற்றிக்கு சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை வாங்க முடியம் என்றால், தாங்கள் நினைக்கும் தொகுதியில், தாங்கள் நினைப்பவர்களே வெற்றி பெறுவார்கள் என்றால் அதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கு இல்லை.

பின்பு, ஓரே நாடு ஓரே தேர்தல் என்பதை கொண்டு வந்து, ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும்.

பாஜக எப்போதுமே ஆட்சி பொறுப்பில் இருக்கும். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டம் இருக்காது. ஆர்.எஸ்.எஸ்- கனவுகள் செயல்படுத்தப்படும்.  இதனால், அப்பாவி மக்களின் நிலை கேள்விக் குறிதான். 

இந்த சூழலில் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. மிகப்பெரிய அளவிலான மோசடி பீகார் தேர்தலில் அரங்கேறி உள்ளது. பாஜகவின் தொடர் வெற்றி இந்தியாவிற்கும், ஜனநாயகத்திற்கும், அரசமைப்பு சட்டத்திற்கும் நல்லதல்ல. உலகின் மிகப்பெரிய கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையில் இந்தியாவிற்கு நல்லதல்ல, பீகார் தேர்தலில் அதிகாரம் வென்று, மக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!