புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ”உலக அமைதிக்காக ஒரு நிமிடம் அமைதி காத்தல்” நிகழ்வு!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ”உலக அமைதிக்காக ஒரு நிமிடம்  அமைதி காத்தல் நிகழ்வு” நடைபெற்றது.  இன்று காலை 11 மணியளவில் வெங்கடேஸ்வர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்ற  நிகழ்விற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குநர் ரா.சுதர்சன் முன்னிலை வகித்தார். நல்லோர் வட்ட புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் சா.விஸ்வநாதன் நிகழ்வின் நோக்கம் குறித்து விளக்கினார். அவர் பேசும்போது  ”1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள்,உலக அமைதிக்கான ஒரு உடன்பாட்டோடு முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது. முதன்முதலில் உலக அளவில் நடந்த ஒரு அமைதி ஒப்பந்தம் அது. அதை நினைவு கூறும்வகையில் திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான நிறுவனம் உலகத்தின் அமைதிக்காக தினந்தோறும் ஒரு நிமிடம், இந்திய நேரப்படி 11.11 மணிக்கு, அமைதி காத்தல் நிகழ்வை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அந்த ஒரு நிமிட அமைதி காத்தல் நிகழ்வு இன்று வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெறுவது மகிழ்ச்சியைத்தருகிறது. தனிமனித அமைதி, குடும்ப அமைதி, தேச அமைதி, உலக அமைதி இதுவே இந்த நிகழ்வின் நோக்கம் என்றார்.

இந்த நிகழ்வில் துணைமுதல்வர் சு.குமாரவேல் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!