அரக்கோணம் புதிய மார்க்கெட் விரைவாக திறக்க வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ ஆய்வில் கோரிக்கை!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் புதிய மார்க்கெட் கட்டுமான பணி நடந்து வருகிறது இப்பணிகளை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி சுற்றி பார்த்து  ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது 40 வருடங்களுக்கு முன்பு  எம் ஜி ஆர் ஆட்சியின் போது அமைச்சர் விஜயசாரதியால் மார்கெட் புனரமைக்கபட்டது அப்போது மூன்று மாத வாடகை கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்பட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டது தற்போது ஆறு நூறு ரூபாய் வாடகை கொடுத்து வியாபாரிகள் நஷ்டத்தில் இருந்து வந்தனர் இந்த நிலையில் புதிய கட்டிடம்  போதிய வசதிகள் இல்லாத நிலையில் கட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நான்கு ஆயிரம் வரை மாத வாடகை நிர்ணயம் செய்தும் ரூ4 லட்சம் வரை முன்பணம் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது எனவே முன்பணம் வாடகை விசயத்தில் மறுபரிசிலனை செய்ய வேண்டும் மேலும், மார்க்கெட் பணிகள் 20% வரையில் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகள் கடந்து விட்டது இதனால் வியாபாரிகள் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆகவே துறைச் சார்ந்த அமைச்சர் நேரு மற்றும் மாவட்ட அமைச்சர் காந்தி உடனடியாக தலையிட்டு வியாபாரிகள் நலன் காக்கும் வகையில் விரைவாக புதிய மார்க்கெட் திறந்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.ஆய்வின் போது அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் பாபு நரசிம்மன் ஜெர்ரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வியாபாரிகள் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!