தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று சாதனை! புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்!!


புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்திய கணித அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய 34 வது குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு  செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது.  மாவட்டம் முழுவதிலிருந்தும் 25 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், அறிவியல் வினாடி, வினா மற்றும்  அறிவியல் கண்காட்சி ஆகியவற்றில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ”நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை ” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். செ.ஜீத்திகா, சை.ச. ஆத்திகா இருவரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.  அறிவியல் வினாடிவினா போட்டியில் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர். மோ.கவின் கிஷோர் மாவட்ட அளவில் முதல் பரிசும், ஜா.சஹானா மற்றும் உ.அபுபக்கர் சித்திக் ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.  மாவட்ட அளவிலான அறிவியல் காண்காட்சியில்  கு.ஹரிஷ் குமார் மற்றும் சி. இளந்தீபன் ஆகியோர் ”கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்” என்ற கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு மற்றும் ரொக்கப் பரிசு இரண்டாயிரம் பெற்றனர்.   அறிவியல் இயக்கப் போட்டிகளில் வெற்றிபெற்று  பள்ளிக்குப் பெருமை  சேர்த்த  மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர். தங்கம் மூர்த்தி மற்றும் இயக்குனர். ரா. சுதர்சன் ஆகியோர்  நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர். அறிவியல் ஆசிரியர்கள். கமல்ராஜ், சித்திரைச் செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் பரிசுபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!