இறந்த பிணத்தோடு வட்டாட்சியரிடம் மயானம் கேட்டு கோரிக்கை!!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஆதி திராவிட அருந்ததியர் கிராமம் உள்ளது.இந்த கிராமத்திற்கு மயானம் நீண்ட காலமாக இல்லை இவர்கள் இறந்த பிணத்தை ஏரியில் புதைத்து வந்தனர். மழை காலங்களில் ஏரி நிரம்பும் பொழுதெல்லாம் புதைத்த பிணங்கள் மேலே மிதக்க ஆரம்பித்து விடும்!
இதேபோன்று சென்ற மாதம் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். அவரை முழங்கால் தண்ணீரில் சென்று ஏரியில் புதைத்துள்ளனர். அன்று இரவு திடீரென்று ஏரி நிரம்பியதால் புதைத்த உடல் மேலே மிதக்க ஆரம்பித்து விட்டது. இதனைக் கண்ட உறவினர்கள் பிணத்தை அழுத்தி கல்லை வைத்து மூடி நீர் புகாத வண்ணம் பந்தல் அமைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று அதே கிராமத்தில் நடராஜன் மனைவி அமுதா வயது 65 என்பவர் இறந்துவிட்டார். நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மயானம் இடம் ஏரி நிரம்பியதால் அங்கு புதைக்க முடியாத நிலை ஏற்பட்டது இதனால் கிராம மக்கள் பிணத்தை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.தகவல் அறிந்த வட்டாட்சியர். செல்வி, சோளிங்கர் காவல் ஆய்வாளர். ராமச்சந்திரன் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் கிராம மக்கள் எங்களுக்கு ஆதியில் இருந்து மயானம் இல்லை கிராமத்தில் இறப்பவர்களை ஏரியில் தான் புதைத்து வருகிறோம் எத்தனையோ முறை அரசாங்கத்திடம் மனு அளித்தும் இதுவரையில் எங்களுக்கு சுடுகாட்டு ஏற்படுத்தித் தரவில்லை தற்பொழுது இறந்துள்ள அமுதாவின் உடலை புதைப்பதற்கு ஏரி நிரம்பியுள்ளதால் ஏரில் புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள் இதற்கு வட்டாட்சியர். செல்வி, வருவாய் துறை அலுவலர்கள் அதே பகுதியில் தற்சமயத்திற்கு அரசுக்கு சொந்தமான மேடான பகுதியை ஏற்பாடு செய்து அதில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
உங்கள் கிராமத்திற்கு சுடுகாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் தகவல் கொடுக்கிறோம் பின்னர் இதே பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலமிறந்தால் அதைக் கண்டு பிடித்து ஏற்பாடு செய்து கிறோம் இல்லையென்றால் தனி நபரிடம் இருந்து விலைக்கு வாங்கி தர ஏற்பாடு செய்கிறோம் என உங்களுக்கு நிரந்தர சுடுகாடு ஏற்படுத்தி தருகிறோம் என உறுதி அளித்த பின்னர்பொதுமக்கள் அமுதாவின் உடலை மேடான பகுதியில் அடக்கம் செய்தனர்.
இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக