கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மின்விளக்கு தோரணங்கள் அலங்கார பணிகள்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 1. 12. 2025 கார்த்திகை மாதம் 15ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் ஏழு முப்பது மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது.
மகா கும்பாபிஷேகம் என்னும் திருக்குட பெருஞ்சாந்திப் பெருவிழா நடைபெற உள்ளதால் மின்விளக்கு தோரணங்கள் மற்றும் அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது மேலும் அம்மன் கரகத்திற்கு பக்தர்கள் கும்மியடித்து வழிபாடு செய்து வருகின்றனர் .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி



கருத்துகள்
கருத்துரையிடுக