வடலூரில் நடைபெற்ற இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம்!!
கடலூர் மாவட்டம் வடலூர் பிரைடு லயன்ஸ் கிளப் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய இருதயம் மற்றும் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தலைவர் லயன், தமிழரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொருளாளர் பெஸ்ட் ஸ்டிக்கர். சிவலிங்கம் முன்னிலை வகித்தார். முகாமை முன்னாள் ஆளுநர். ராஜன் மற்றும் தொழிலதிபர். கே.எஸ்.ஆர்.பாலு, மித்ரா மருத்துவமனை, டாக்டர் பிரியதர்ஷன், எஸ்டி ஈடன் பள்ளிகள் நிர்வாக இயக்குனர். தீபக்தாமஸ், ஆனந்த, செல்வகுமார், டாக்டர். ஆனந்தலட்சுமி தலைமையிலான அப்போலோ மருத்துவமனை குழுவினர்கள் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் சுமார் 400 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்தம் அழுத்தம் சர்க்கரை நோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கெள்ள பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரிமா சங்க உறுப்பினர்கள் கலைமணி, பிரேம், ஆனந்த், அஜித், அபிலேஷ், ராஜ்குமார் ராமதாஸ், விஜயகுமார், பிரவீன், கோகுல் கண்ணன் மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் செயலாளர் அரிமா கார்த்திக் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக