ஆற்காடு அருகே அடையாளம் தெரியாத மூதியவர் சாலை விபத்தில் பலி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்கரமல்லூர் கிராமம் அருகே 20.10.2025 அன்று மதியம் 12.00 மணியளவில் சாலை விபத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.

காவல்துறையின் தகவலின்படி, அண்ணாதுரை (வயது சுமார் 65), முகவரி தெரியவில்லை, புதுப்பாடி சக்கரமல்லூர் சாலையில்  –  நடைபயணம் செய்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் தலையில் கடுமையாக காயமடைந்தார்.

அங்கு இருந்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 02.11.2025 அன்று மதியம் 3.47 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

இவர் சுமார் 165 செ.மீ உயரம், கருநிறம் கொண்டவர். வெள்ளை புளு கலர் கட்டம் சட்டை, புது நிற வேஷ்டி அணிந்திருந்தார். வலது கண்ணுக்கு கீழே ஒரு மச்சம் மற்றும் கழுத்தின் இடப்புறத்தில் ஒரு மச்சம் காணப்படுகிறது.

இவரின் பிரேதம் தற்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் அடையாளம் அல்லது உறவினர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்பு எண்கள்:

ஆற்காடு கிராமிய காவல் நிலையம்: 📞 94981 00380

காவல் ஆய்வாளர் (செல்): 📞 94981 05092

காவல் உதவி ஆய்வாளர் (செல்): 📞 94861 83226

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!