நெமிலியில் உதயநிதி பிறந்தநாள் விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நெமிலி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார். நகர செயலாளர். ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

முன்னதாக துணை முதல்வர்.உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காலை சேந்தமங்கலத்தில் இருந்து சயனபுரம் வழியாக நெமிலி பேருந்து நிலையம் வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 520 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற முதல் மாணவருக்கு வாஷிங் மிஷின் வழங்கப்பட்டது. 

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கினர். இதனை தொடர்ந்து நெமிலி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். 

மேலும் மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய சுவாதி என்னும் மாணவிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவி தொகையை அமைச்சர் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர். மணிவண்ணன், நெமிலி பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், நெமிலி நகர வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின், ஒன்றிய துணை செயலாளர். முகமது அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!