ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில், ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பின் சார்பில் ஒருநாள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகளும் அரசு ஊழியர் அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் பாலமுருகன், மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத் தலைவர் நரசிம்மன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில துணைத்தலைவர் சிவராஜ், தலைவர்கள் எழில், இளம்வழுதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர்கள். ஆதவன், சரவணன், சதீஷ்குமார், சையத் சிராஜுதீன், பர்சீலா, வான சாஸ்திரி, யோசுவா, தியாகராஜன், தேவராஜன், விநாயகம் ஆகியோர் துவக்க உரையாற்றினர். தொடர்ந்து, போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் கண்டன உரையாற்றி ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விளக்கினார். தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 2010-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துதல், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 243 அரசாணையை ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், பி.ஏட். பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

ராணிப்பேட்டை முத்துக்கடையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண ஜாக்டோ–ஜியோ தலைமையினரை தமிழக அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!