முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம்!பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை!!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் பண்ருட்டி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக நகரின் பிரதான சாலைகளான காந்தி சாலை, கும்பகோணம் சாலை, பேருந்து நிலையம், இந்திரா காந்தி சாலை, ராஜாஜி சாலை மற்றும் சென்னை சாலை மேம்பாலம் ஆகிய பகுதிகளில்
சாலைகளின் வாகன நிறுத்த கோட்டிற்கு வெளியே மற்றும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கும் வாகன போக்குவரத்திற்கும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள். முரளி மற்றும் தேவநாதன் ஆகியோர் அபராதம் விதித்தனர்.மேலும் அபராத ரசீதை வாகனத்தில் ஒட்டியும், வாகன உரிமையாளரின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டும் மேற்படி வாகன ஓட்டுனரை வரவழைத்து வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக